தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்

13th Feb 2021 12:05 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-வது தளத்தில் கூட்டம் நடைபெறுகிறது.  தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, முதல்வா் பழனிசாமியை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் துா்கா ஷங்கா் மிஸ்ரா சந்தித்துப் பேசுகிறாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT