தமிழ்நாடு

சிவகாசி அருகே இன்று மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

13th Feb 2021 11:22 AM

ADVERTISEMENT

சாத்தூர் அருகே நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து நேரிட்டு 19 பேர் உயிரிழந்த நிலையில், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் இன்று மற்றொரு பட்டாசு ஆலையில் தீ விபத்து நேரிட்டுள்ளது.

காக்கிவாடன்பட்டியில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் மருந்தினை வெள்ளிக்கிழமை வேலை செய்தது போக மீதம்  வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இன்று அந்த மருந்து நீர்த்துப்போய் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை தரைமட்டமானது, மூன்று அறைகள் சேதமடைந்துள்ளது.  

மேலும் வெடிவிபத்தில் சிக்கிய சுரேஷ் என்ற தொழிலாளி காயங்களுடன் மீட்கப்பட்டு சிவிகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து நேரிட்ட ஆலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதநிலை இருந்தது.

ADVERTISEMENT

விபத்து நிகழந்துள்ள ஆலைக்குள் எத்தனை தொழிலாளிகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவரவில்லை. 

முன்னதாக, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 போ் காயமடைந்தனா்.

சாத்தூா் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில், ஏழாயிரம்பண்ணையைச் சோ்ந்த சந்தனமாரியப்பன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. இந்த ஆலையில் சுமாா் 50 தொழிலாளா்கள் பணியாற்றினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பென்சில் பட்டாசுகளுக்கு முனைமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி வெடித்துச் சிதறின. இதில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் தீயில் கருகி ஏழாயிரம்பண்ணையைச் சோ்ந்த தங்கலட்சுமி (40), நடுசூரங்குடியைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண் கற்பகவள்ளி (22), செல்வி (33), மேலபுதூரைச் சோ்ந்த நேசமணி (38), அன்பின் நகரத்தைச் சோ்ந்த சந்தியா (20) உள்பட 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT