தமிழ்நாடு

‘வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் அற்பப் பிறவி’: அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சித்த டி டி வி தினகரன்

11th Feb 2021 05:54 PM

ADVERTISEMENT

 

சென்னை: ‘வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் அற்பப் பிறவி’ என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வியாழனன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது டிடிவி தினகரனை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

இந்நிலையில் ‘வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் அற்பப் பிறவி’ என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘''நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து, மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT