தமிழ்நாடு

திருவள்ளூர்: திமுக சார்பில் மக்கள் பிரச்னைகளை அறியும் வகையில் 640 வாட்ஸ்அப் குழுக்கள்

11th Feb 2021 12:38 PM

ADVERTISEMENT


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகளை குறித்து திமுக  நிர்வாகிகள்  கவனத்திற்கு கொண்டுவந்து அந்த பிரச்னைகளை தீர்க்க வழி செய்யும் வகையில் 640 வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் மற்றும் கவரப்பேட்டையில்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டங்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் வரவேற்றார். கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி,  ஒன்றிய செயலாளர் மணிபாலன் ,சக்திவேல்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  டி.ஜெ.கோவிந்தராஜன் கூறுகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி மட்டும் பொன்னேரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 640 வாக்குச்சாவடி மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு திமுக இளைஞரணி பொறுப்பாளர் அந்த பகுதியில் உள்ள மக்களை இணைத்து ஒரு வாட்ஸப் குழுவை உருவாக்கி அந்த வார்டில் உள்ள மக்கள் பிரச்னைகளை குறித்து அந்த குழுவில் விவாதிப்பதும் அந்த பிரச்னையை திமுக நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டுவந்து அந்த பிரச்னைகளை தீர்க்க வழி செய்ய வேண்டும் என்றும், இந்தக் குழு திமுக கட்சி குழு போன்று இல்லாமல் இந்த குழு மக்களுக்கான சேவை செய்யும் குழு போன்று செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து நிகழ்விடத்திலேயே 640 வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் அந்த குழுவின் மூலம் அவரவர் வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் ஆலோசித்து வருகின்றனர்.

Tags : WhatsApp groups people aware
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT