தமிழ்நாடு

6,7,8-ஆம் வகுப்புகளுக்கு தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை: செங்கோட்டையன்

11th Feb 2021 12:08 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் 6,7,8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலைத் திட்டப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படாது. அதற்கு பதிலாக 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.

தற்போதைய சூழலில், 6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளில் பயில்வோரில் 98.5 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள் என்றும் கூறினார்.
 

ADVERTISEMENT

Tags : senkottaiyan செங்கோட்டையன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT