தமிழ்நாடு

தை அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடல்

11th Feb 2021 10:05 AM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் கரோனா தொற்று காரணமாக புனித நீராடலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு தை அமாவாசை நாளான வியாழக்கிழமை (பிப்.11) மக்கள் புனித நீராடல் செய்து வருகின்றனர்.

வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் தை, ஆடி அமாவாசை, அர்தோதயம், மஹோதய அமாவாசை நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள், தங்களது முன்னோர்களையும், இறைவனையும் வழிபடுவர்.

வேதாரண்யம் கடலில் நீராடல் செய்து முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்.
 
இதில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் வந்து செல்வது வழக்கம்.

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாளில் இருந்து புனித நீராடலுக்கான சிறப்பு அமாவாசை நாள்களில் நீராடவும், கோயிலில் வழிபடவும் தடை வதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நிகழாண்டு தை அமாவாசை நாளில் நிபந்தனைகளுடன் நீராடல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

வேதாரண்யம் கடலில் நீராடல் செய்து முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்.

இதையடுத்து மக்கள் நீராடல் செய்தனர். வேதாரண்யம் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அர்ச்சனை போன்ற நேர்த்திக்கடன் செய்வது நிறுத்தப்பட்டிருந்தன.

வழக்கம்போல, வேதாரண்யம், கோடியக்கரைக்கு அரசு பேருந்துகளை கூடுதல் முறைகள் இயக்கப்பட்டது. 
 

Tags : Thai Amavasai holy bathing Kodiakkarai sea
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT