தமிழ்நாடு

மேட்டூர் காவிரியில் முன்னோர்களுக்கு தற்பணம்

11th Feb 2021 10:30 AM

ADVERTISEMENT


தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரி கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வியாழக்கிழமை தர்ப்பணம் செய்தனர்.

வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர்.

தை அமாவாசையை முன்னிட்டு மக்கள்  தங்கள் முன்னோர்களுக்கு கங்கை மற்றும் காவிரி போன்ற நீர் நிலைகளிலில் தர்ப்பணம் செய்வதால் குடும்பத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதம் மூலம் குடும்பத்தில் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இதன்படி, வியாழக்கிழமை சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவேரி பாலம் காவிரி படித்துறையில் சேலம்,  தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

ADVERTISEMENT

அவர்கள் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத எள், அரிசி மாவு கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர்.

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்.

பின்னர் ஆற்றில் புனித நீராடி, காவிரி நீரை தீர்த்தமாக தங்களது வீடுகளில் தெளிக்கச் எடுத்துச் சென்றனர்.

Tags : Thai Amavasai holy bath
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT