தமிழ்நாடு

பன்னப்பட்டியில் அம்மா மினி கிளிக் தொடங்கி வைப்பு

11th Feb 2021 12:16 PM

ADVERTISEMENT


ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பன்னப்பட்டியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பொட்டியபுரத்தில் முதல்வரின் அம்மா மினி கிளிக்கை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் ரிப்பன் வெட்டி சிகிச்சையைத் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பன்னப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பன்னப்பட்டி, பெரியப்பட்டி, தாராபுரம் மற்றும் குண்டுக்கல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 337மாணவர்கள் 409 மாணவிகள் என மொத்தம் 746 மிதிவண்டிகளை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார். 

பொட்டியபுரம் கிராம சேவை மைய கட்டடத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளிக்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் கிராம சேவை மைய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வரின் அம்மா மினி கிளிக்கை சட்டப்பேரவை உறுப்பினர் ரிப்பன் வெட்டி சிகிச்சையைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ரமணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், மணிமுத்து, சேரன் செங்குட்டுவன், ஓமலூர் அம்மா பேரவை செயலாளர் தளபதி, மல்லிகா உள்ளிட்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : ammaa mini click Omalur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT