தமிழ்நாடு

ஸ்ரீவிலி. ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

11th Feb 2021 03:12 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவேங்கடபுரம் காலனி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

இப்பகுதிகளுக்கு ஆறு மாதமாக குடிநீர் வினியோகிக்கவில்லை என திருவெங்கடபுரம் காலனி கிராமத்தினர் அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிமன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதையடுத்து குடிநீர் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மல்லி ஆறுமுகம் அலுவலகத்தை காலி குடங்களுடன் ஆண்கள் பெண்கள் என கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மல்லி ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த பகுதியில் வாறுகால் தெரு விளக்கு சாலை வசதி உள்ளிட்ட வசதிகளையும் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வேதநாயகம் தலைமை வைத்தார் அச்சம்தவிழ்த்தான் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் விவசாயச் சங்க செயலாளர் பலவேசம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT