தமிழ்நாடு

நரிக்குடி எமனேஸ்வரா் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு

11th Feb 2021 01:11 PM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோவிலில், தை அமாவாசை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற இக்கோவிலில் நோயினை தீர்த்து எம பயத்தை போக்கும் தலமாக சிறந்து விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.  கோவில் எமதீா்த்த திருக்குளத்தில் நீராடி பிதுர் தர்ப்பணங்களை செய்து தீபங்கள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

தை அமாவாசை சிறப்பு வழிபாட்டில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நரிக்குடி எமனேஸ்வரி.

இதேபோல நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர்,சீதா, லெட்சுமண, அனுமன்சமேத சந்தானராமர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர், நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர், செட்டிசத்திரம் ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம், செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கவந்து கொண்டனர்.

 

 

Tags : Special worship Thai Amavasai Narikkudi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT