தமிழ்நாடு

சென்னையில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

11th Feb 2021 12:21 PM

ADVERTISEMENT


இந்திய அஞ்சல் துறையின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 13-2-2021 (சனிக்கிழமை) காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் கீழ்க்கண்ட தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மயிலாப்பூர், தியாகராய நகர், பார்த்தசாரதி கோவில், சேப்பாக்கம், கோபாலபுரம், மெட்ராஸ் யூனிவர்சிட்டி, மந்தைவெளி, அக்கவுண்டன்ட் ஜெனரல் தபால் நிலையம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி , சூளைமேடு, கிரீம்ஸ் ரோடு, ஹிந்தி பிரச்சார சபா, நுங்கம்பக்கம் ஹை ரோடு, தியாகராயநகர் வடக்கு. 13-2-21 அன்று மேற்கண்ட தபால் நிலையங்களில் பொதுமக்கள் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கு சேவைகளை தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆதார் திருத்தங்களுக்காக ரூ.‌50 சேவைக் கட்டணமாக பெறப்படும். புதியதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Aadhar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT