தமிழ்நாடு

காலமானார் சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார்

11th Feb 2021 05:27 AM

ADVERTISEMENT


சேலம்: சேலத்தைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார் (78) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு  சிவராஜ் சித்த வைத்திய சாலையைக் கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வந்தவர் சிவராஜ் சிவகுமார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவராஜ் சிவகுமார் புதன்கிழமை அதிகாலை காலமானார். இவருக்கு மனைவி மல்லிகா, மகன் சிவராஜ் சஞ்சய், மகள் சிவராஜ் கல்பனா 
உள்ளனர்.  
அவரின் உடல் சேலம் சிவதாபுரத்தில் உள்ள பூர்வீக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், உறவினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரின் தோட்டத்தில்  புதன்கிழமை மாலை உடல் அடக்கம் 
செய்யப்பட்டது.
முதல்வர் இரங்கல்: சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார், பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வந்தார். அவர் மட்டுமின்றி, அவரது குடும்பமே சித்த வைத்தியத்தில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT