முதுமலை புலிகள் காப்பகத்தில் நீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட கரடி மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனச்சரகத்தில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் உள்ள காலியான பெரிய தண்ணீர் இல்லாத நீர் தொட்டிக்குள் புதன்கிழமை ஒரு ஆண் கரடி சிக்கிக்கொண்டது.
ADVERTISEMENT
இது குறித்த தகவலறிந்த அப்பகுதி வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து அந்த கரடிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர். பின்னர் மரக்கிளைகளைக் கொண்டு ஏணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அந்த கரடி வெளியேற வாய்ப்பு ஏற்படுத்தி தந்தனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த கரடி வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது.