தமிழ்நாடு

ஈரோட்டில் நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்

11th Feb 2021 03:54 PM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் ரயான் நூல் விலை உயர்வைக் கண்டித்து இன்று முதல் 11 நாட்களுக்கு ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் போன்ற பகுதிகளில் 30 ஆயிரம் விசைத்தறிகளில் ரயான் துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் ரயான் நூல் வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்ததால் இவர்கள் உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சிரமம் அடைந்து வந்தனர். உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு மீட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 4.50 பைசா வரை நஷ்டம் அடைந்து வந்தனர். 

எனவே நஷ்டத்தைச் சமாளிப்பதற்காக இன்று முதல் வருகிற 21-ஆம் தேதி வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயான் துணி உற்பத்தி நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி மற்றும் 7 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : ஈரோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT