தமிழ்நாடு

பெட்ரோல் விலை ரூ.90-ஐ கடந்தது: வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம்

11th Feb 2021 09:00 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியநிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த 2017, ஜூன் 15-ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிா்ணயிக்கப்படும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த நடைமுறையில் சற்று மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் எரிப்பொருள்களின் விலைகள் ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வியாழக்கிழமை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90.18 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் டீசல் ஒரு லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.83.18 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வணிகர்கள், வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.

பெட்ரோல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிவருவதால் அத்தியாவசிப் பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.94. 36 ஆகவும், தில்லியில் ரூ.87.85 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.89.16 ஆகவும், பெங்களூருவில் ரூ.90.48 ஆகவும், ஜெய்ப்பூரில் ரூ.94.25 ஆகவும்,  விற்பனையாகிறது. பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி மட்டும் 61 சதவீதத்துக்குமேல் உள்ளது. இதுவே, டீசல் மீது மத்திய, மாநில அரசுகளின் வரி 56 சதவீதமாக உள்ளது.

உள்ளூா் விற்பனை வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள்களின் விலையில் மாறுபாடு இருக்கும். இருப்பினும், தற்போதைய நிலையில் பெட்ரோல் டீசல் விலையானது இதுவரையில்லாத புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.

விலையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கையைாக உள்ளது. எனினும், இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியைக் குறைப்பதன் மூலம், அவற்றின் விலையைக் குறைக்கும் திட்டமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். 

Tags : Petrol diesel prices priceshighs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT