தமிழ்நாடு

திருக்குறள் ஒப்பித்தால்  பெட்ரோல் இலவசம்

11th Feb 2021 05:37 AM

ADVERTISEMENT

 

கரூர்: கரூரில், திருக்குறளை பிழையில்லாமல் ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பெட்ரோல் விலையில்லாமல் வழங்கி வருகின்றனர் வள்ளுவர் அறக்கட்டளையினர்.

கரூர் வள்ளுவர் மேலாண்மை மற்றும் அறிவியல் கல்லூரியின் வள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.  மேலும், 1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கரூர் வள்ளுவர் மேலாண்மை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டு படிப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே திருக்குறளை பரப்பும் வகையில் வள்ளுவர் கல்விஅறக்கட்டளையினர் 10 திருக்குறளை பிழையில்லாமல் ஒப்பித்தால் அரை லிட்டர் பெட்ரோலையும், 20 திருக்குறளை ஒப்பித்தால் ஒரு லிட்டர் பெட்ரோலையும் விலையில்லாமல் கடந்த சில தினங்களாக வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து வள்ளுவர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் க.செங்குட்டுவன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், திருக்குறள் குறித்த அறிவு மாணவ, மாணவிகளிடையே குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு  இந்தப் புது முயற்சியை எடுத்துள்ளோம். நாகம்பள்ளியில் உள்ள பெட்ரோல் விற்பனைநிலையத்துக்கு பெற்றோர்களுடன் வரும் பள்ளி மாணவ, மாணவிகள் குறளை ஒப்பித்து பெட்ரோலை விலையில்லாமல் வாங்கிச் செல்கின்றனர் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT