தமிழ்நாடு

காரைக்குடி - மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி மனு

11th Feb 2021 03:34 PM

ADVERTISEMENT

 

காரைக்குடி பட்டுக்கோட்டை மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி ரயில் பயனீட்டாளர்கள் சங்கத்தினர் ரயில்வே வாரிய தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர். 

ரயில் பயனீட்டாளர்கள் சங்கத்தலைவர் பட்டுக்கோட்டை ஜெயராமன், அறந்தாங்கி ராஜ்குமார், அதிராம்பட்டினம் சஹாபுதீன் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர் திருச்சி), பழனிமாணிக்கம் (தஞ்சை), கார்த்தி  சிதம்பரம், செல்வராஜ், நவாஸ்கனி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஹிதயதுல்லா, ஆகியோர் ரயில்வே வாரிய தலைவர் சுனீட்சர்மாவை புதன்கிழமை மாலை சந்தித்தனர். 

அவரிடம், நீண்டநாள் கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்குடி- மயிலாடுதுறை (அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைபூன்டி மார்க்கம்) தொடர்வண்டி சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் ஆட்களைப் பணி நியமனம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலையும் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT