தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைக்கு மயிலாடுதுறையில் ஓய்வூதியர்கள் ஆதரவு

11th Feb 2021 02:58 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரும் வியாழக்கிழமை ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியரகள் சங்கத்தினர் 10-வது நாளாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்துக்கு, மாவட்ட இணை செயலாளர் எம்.நடராஜன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் து.இளவரசன், வட்ட செயலாளர் ஆர்.சிவபழனி, அனைத்து மருந்தாளுர் சங்க மாவட்ட செயலாளர் என்.ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ADVERTISEMENT

இந்த போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பழனிசாமி தலைமையில் ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT