தமிழ்நாடு

பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்

11th Feb 2021 03:00 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு தினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார். 

பாஜக மயிலாடுதுறை நகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பண்டிட் தீனதயாள் உபாத்யாயவுக்கு புகழஞ்சலி செலுத்தி, அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதில், மாவட்ட துணைத் தலைவர் முட்டம் செந்தில்குமார், பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் அய்யா.சுரேசு, மாவட்ட தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சதீஷ்பாபு, இளைஞரணி நகரச் செயலாளர் ராஜகோபால், சிறுபான்மை பிரிவு நகரத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ADVERTISEMENT

Tags : மயிலாடுதுறை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT