சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 105.08 அடியிலிருந்து 104.98 அடியாக சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 229 கன அடியிலிருந்து 230 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 71.44 டிஎம்சியாக இருந்தது.