தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: யுனானி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்

11th Feb 2021 02:42 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், ஹக்கிம் அஜ்மல் கான் சாஹிப் பிறந்த நாளான பிப்ரவரி 11ஆம் தேதியை நினைவுகூரும் விதமாக, தேசிய யுனானி தினமாக அனுசரிக்கப்பட்டது.

விழாவிற்கு, மாவட்ட சித்த மருத்துவர் பத்மநாபன் தலைமை வகித்தார். யுனானி மருத்துவர் எ.ஷபிவுல்லா, பெரியப் பள்ளி வாயில் நிர்வாகத் தலைவர் ஏ.சிஹாபுதீன், மேலப் பள்ளி வாயில் நிர்வாக சபை செயலாளர் எல்.எம்.முஹம்மது அஷ்ரப், நாம் மனிதர் அறக்கட்டளை நிர்வாகி எஸ்.தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத் துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியபதி சார்பில், கோவிட் 19 நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த யுனானி மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஜோஸாந்தா இ சு ஆல் கசாயமாகவும், பொடியாகவும் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டன. 

யுனானி மருத்துவத்தில் உள்ள உணவே மருந்து என்ற உணவு முறை சிகிச்சை அடிப்படையில் பொதுமக்களுக்கான பலவீனத்தைப் போக்குவதற்காக ஆளி விதை மற்றும் பாதாம் பருப்புடன் கூடிய ஹரீரா (பாயாசம்) தயாரித்து வழங்கப்பட்டன. முகாமில்,மருத்துவர்கள் ரசியா தாசின், அத்தாவுல்லா, தஹரின் சுமையா மற்றும் மருந்தாளுனர்கள் பரமேஸ்வரி, செளமியா, ஜெஸ்லீயா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

முகாமில், கூத்தாநல்லூர், மரக்கடை, லெட்சுமாங்குடி, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, சேகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 700க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பரிசோதனை செய்து, விழிப்புணர்வுடன் ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.

Tags : கூத்தாநல்லூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT