தமிழ்நாடு

ஊத்தங்கரையில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

11th Feb 2021 01:15 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெ.அங்கப்பன் (எ) அசோகன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

உதவி பொறியாளர் வி. சிந்து முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே தொடங்கிய பேரணி ஊத்தங்கரை பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags : Helmet Awareness Rally Uttankari
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT