தமிழ்நாடு

தேர்தல் தேதி குறித்து தில்லி சென்று அறிவிப்பு : சுநீல் அரோரா

11th Feb 2021 01:45 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து தில்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சுநீல் அரோரா விளக்கம் அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், தமிழகத்தில் பணப்புழக்கம், மற்றும் பணப்பட்டுவாடா போன்ற காரணங்களால், ஆர்.கே. நகர் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில், தேர்தல் ரத்து செய்யப்படுவது என்பது மிகவும் உச்சக்கட்ட நடவடிக்கை.

ADVERTISEMENT

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பான தகவல்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் குமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு நேரில் வர  வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமற்றது என்று பதிலளித்தார்.
 

Tags : election Sunil Arora
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT