தமிழ்நாடு

லோயர் கேம்ப் பெரியாற்றில் குதித்த கல்லூரி மாணவர்: 2-வது நாளாக தேடும் பணியில் போலீசார்

11th Feb 2021 11:18 AM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாற்றில் குதித்த கல்லூரி மாணவரை இரண்டாவது நாளாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கடலூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பாண்டியன் (20). இவர் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாண்டியன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

புதன்கிழமை கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்தை தனது தந்தை முருகனிடம் தெரிவித்தார். அதற்கு முருகன் தனது மகனை கண்டித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவர் பாண்டியன் தனது மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு லோயர் கேம்ப் அருகே உள்ள முல்லை பெரியாறுக்கு சென்றுள்ளார்.

அங்கு வைரவன் அணைக்கட்டு அருகே மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு செல்லிடப்பேசி மற்றும் காலணிகளை கழற்றி மோட்டார் பைக் அருகே வைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் காணாததால் முருகன் மகனை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது வைரவன் அணைக்கட்டு அருகே மோட்டார் பைக் மற்றும் செல்லிடப்பேசி  இருப்பதாக தகவல் வந்தவுடன் அப்பகுதிக்கு சென்றார்.

தனது மகனை திட்டியதால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று குமுளி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து குமுளி காவல் நிலைய போலீசார், தீயணைப்பு படையினர் ஆற்றில் குதித்த மாணவரை வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தேடி வருகின்றனர்.

Tags : College student Lower Camp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT