திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுப்பதற்கு வியாழக்கிழமை (பிப்.11) முதல் முன்பதிவு தொடங்குகிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24 -ஆம் தேதி முதல், கரோனா பொதுமுடக்கம் காரணமாக தங்கத்தேர் இழுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை (பிப்.11) தை அமாவாசையை முன்னிட்டு மீண்டும் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் கோயில் நிர்வாகத்தினரால் தொடங்கி வைக்கப்படுகிறது.
மேலும் தங்கத்தேர் இழுக்க ரூ. 2,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் நடைமுறை, வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதேபோல ரூ.25,000 வைப்புத்தொகை செலுத்தி ஆண்டுக்கு ஒரு நாள் தங்கத்தேர் இழுத்துக் கொள்ளலாம்.
ADVERTISEMENT