தமிழ்நாடு

ஊத்தங்கரையில் ரூ.1.08 கோடியில் பள்ளிக் கட்டடப் பணிகளுக்கு பூமி பூஜை

11th Feb 2021 03:44 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்ட நபார்டு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்குப் பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் சி தேவேந்திரன் வடக்கு வேடி மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் என் இளையராஜா, நகரச் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமலம் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேவராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. 

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஞானபண்டிதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தீபக், காரப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வஜ்ரம் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் எனத் திரளாகக் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT