தமிழ்நாடு

சென்னையில் 3 மணி நேரம்: பிரதமர் மோடியின் பயண விவரம்

11th Feb 2021 11:33 AM

ADVERTISEMENT

 

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் பிப்ரவரி 14-ம் தேதி காலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 14 -ஆம் தேதி சென்னை வர உள்ளாா். சென்னை வரும் அவா், பல்வேறு அரசு திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், பிரதமா் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி.

பிறகு, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி 11.15 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தும், மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மதியம் 1.35 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுகிறார். சென்னையிலிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடம் நிறுவனத்தின் புதிய ஆலையை தொடங்கி வைக்கிறார்.
 

Tags : pm modi narendra modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT