தமிழ்நாடு

உசிலம்பட்டி: கூடுதல் உதவித்தொகை கோரி 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 

10th Feb 2021 01:19 PM

ADVERTISEMENT


உசிலம்பட்டி: கூடுதல் உதவித்தொகை கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடர்ந்து இரண்டாம் நாளாக புதன்கிழமை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும். தனியாா் நிறுவன வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலையை 125 நாளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கம் சாா்பில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்று வருகிறது.

மாவட்ட தலைவர் காட்டு ராஜா ,ஒன்றிய தலைவர் நாகராஜ் ,ஒன்றிய செயலாளர் சின்னசாமி ஆகியோர் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியம் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.   

ADVERTISEMENT
ADVERTISEMENT