தமிழ்நாடு

சங்ககிரி: தில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை 

10th Feb 2021 03:08 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுதில்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது. 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்களால் அங்கரிக்கப்பட்டிருந்த உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் மாவட்டத்தலைவர் சி.எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

சங்ககிரி வட்டாரத் தலைவர் செங்கோடன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, தேவூர் நகரத் தலைவர்  சந்திரன்,  சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பி.சி.மணி, முன்னாள்  மாநிலச் செயலர் கே.நடராஜன்,  இளைஞரணி நிர்வாகிகள் கார்த்தி, விஸ்வநாதன், நாகேந்திரன், குமார், நிர்வாகிகள் காசிலிங்கம், பி.பிசுப்ரமணி, செங்கோட்டுவேலு, அரசிராமணி பொன்சித்தையன், பழனியப்பன், ஆறுமுகம், குஞ்சாம்பாளையம் ராஜா, அங்கமுத்து, ஆறுமுகம், சின்னுசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT