தமிழ்நாடு

சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர்

10th Feb 2021 11:18 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று சென்னை வந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரு துணை ஆணையர்கள் தமிழகம் வந்துள்ளனர். 

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா மற்றும் 5 தேர்தல் அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். 

இவர்கள், இன்று மதியம் 12 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

ADVERTISEMENT

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் நாளை தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். 

சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆலோசனைகளை நடத்திய பின்னர் புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் இவர்கள் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தச் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT