தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

10th Feb 2021 01:00 PM

ADVERTISEMENT


சேலம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சேலம் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் முதல்வர் பழனிசாமியின் சேலம் இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
 
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் முதல்வரின் 2 வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையில் வெடிகுண்டு பொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து இது வெறும் மிரட்டல் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் மர்ம நபர் பேசிய செல்லிடபேசி எண்ணை வைத்து அந்த நபரை திருப்பூரில் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT