தமிழ்நாடு

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கைது

10th Feb 2021 02:31 PM

ADVERTISEMENT


சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட மோகன் சென்னை விமான நிலையத்தில் இன்று சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மோகன், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் ஏற்கனவே கைதான நிலையில், சிங்கப்பூர் தப்பிச் சென்ற மோகனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-இல் நீட் தோ்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, தேனி, சென்னை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் என மொத்தம் 16 பேரை, சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில், ஆள்மாறாட்ட முறைகேட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் மோகன் மற்றும் ரஷீத் ஆகியோர் தலைமறைவாகினர்.

இந்த நிலையில், பெங்களூருவில் வசித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த ரஷீத், கடந்த மாதம் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா். இவரை 3 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவலர்கள் விசாரித்தனர்.

வழக்கில் தேடப்பட்டு வந்த மோகன், சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை திரும்பிய நிலையில், அவரும் கைது செய்யப்பட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT