தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

9th Feb 2021 03:15 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சேர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.

ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைப்போல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 

ADVERTISEMENT

தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள மிகைப்படுத்தப்பட்ட பணியிடங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக போராட்டம் நடத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT