தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: குர்ஆன் போட்டியில் வென்ற சிறுமிக்கு விருது

9th Feb 2021 05:19 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

கூத்தாநல்லூர் வட்டம் பொதக்குடி தமுமுக சார்பில், ரமலானில் இணைய வழியில் அல்குர்ஆன் மனப்பாடப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கூத்தாநல்லூரைச் சேர்ந்த சிறுமி ஷமிராவுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டன.

கூத்தாநல்லூர் நகர தமுமுக மற்றும் மமகவைச் சேர்ந்த சாதிக் அலி மகள் எஸ்.ஷமிரா. இவர், லெட்சுமாங்குடி வி.எஸ்.டி. மெட்ரிக்., பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

ADVERTISEMENT

சிறுமி ஷமிரா, 848 பக்கங்கள் கொண்ட அல்திருக்குரா ஆனை, ஓராண்டில் படித்து முடித்துள்ளார். சிறுமி ஷமிராவுக்கு, ஹஜ்ரத் முஹம்மது உமர் பயிற்சி கொடுத்துள்ளார். குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த சிறுமி ஷமிரா, இரண்டாவது முறையாகவும் ஓதிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பொதக்குடி தமுமுக சார்பில், ரமலானில் இணைய வழியில் அல்குர்ஆன் மனப்பாடப் போட்டியை நடத்தினர். இப்போட்டியில், சிறுமி ஷமீரா, இலங்கையைச் சேர்ந்த 3 மாணவிகள் மற்றும் பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்ற கூத்தாநல்லூரைச் சேர்ந்த சிறுமி எஸ்.ஷமிராவுக்கு, தமுமுக, மமக சார்பில், மமக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஹெச்.எம்.டி.ரஹ்மத்துல்லாஹ் நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தார். 

நிகழ்ச்சியில்,மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.ஜெகபர் அலி, நகரத் தலைவர் ஏ.கே.எம்.ஜெகபர் சாதிக், தமுமுக நகரச் செயலாளர் எம்.ஹெச். நிஜாமுதீன், மமக நகரச் செயலாளர் கே.எம்.நைனாஸ் அஹமது, மமக நகரத் துணைச் செயலாளர் கே.பி.முகம்மது ஜான், ஜே.ஹெச்.முகம்மது சுல்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT