தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி அச்சம் போக்க விழிப்புணர்வு கூட்டம்

9th Feb 2021 01:00 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு கவரப்பேட்டை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் போடப்பட்டு வருகிறது.

இதில் சுகாதார துறையினர் முதற்கட்டமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசியின் பின்விளைவு குறித்த அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தனர்.

தொடர்ந்து இவர்களின் அச்சம் போக்க சுகாதாரத்துறை சார்பில் கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கவரப்பேட்டை ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஐஜின் ஜினிதா, கரோனா தடுப்பூசி செவிலியர் வசந்தி, சுகாதார ஆய்வாளர் முரளிகிருஷ்ணா, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

நிகழ்வில் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் முன் பேசிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் பேசுகையில்,

இந்தியாவில் போடப்படும் கரோனா தடுப்பூசி நம்பகத்தன்மையானது. இதனால் யாருக்கும் இதுவரை எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. விலை மதிக்கத்தக்க இந்த தடுப்பூசியைத் துப்புரவுப் பணியாளர்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் செய்த சேவையைக் கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி வழங்கி வருவதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு சுகாதார பணியாளர்களுக்கு தன்னை முன்னுதாரணமாக காட்டி அவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி குறித்தும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த சந்தேகங்களை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் 29 பேர் கரோனா தடுப்பூசி கொண்டனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் முன்கள பணியாளர்களான வருவாய்த் துறையினர், காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போட வட்டார சுகாதாரத் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT