தமிழ்நாடு

திருப்பூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

9th Feb 2021 01:28 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து திமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், பங்கேற்ற திமுகவினர் கூறியதாவது: 

திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் 10 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மாநகரில் மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகர் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமயாக செயல்படுத்த வேண்டும் என்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், மாநில மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொமுச நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT