தமிழ்நாடு

ஸ்ரீவிலி.யில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

9th Feb 2021 04:46 PM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம உதவியாளர் சங்க மாநிலச் செயலாளர் குருநாகப்பன் தலைமை வகித்தார். வட்ட கிளை செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.

கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு, இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி உயர்வில் சென்ற கிராம உதவியாளர்களுக்கு உள்ள ஓய்வூதிய குறைபாடுகளை களைய வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு முறையான ஓய்வு ஊதியம் 7850 வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ7 ஆயிரம்  வழங்க வேண்டும். 

ADVERTISEMENT

வருவாய்த் துறையில் உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். கிராம உதவியாளர் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகள் எனக் குறைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட இணைச் செயலாளர் ரத்தினகுமார், கொள்கை பரப்பு செயலாளர் செல்வி உட்பட கிராம உதவியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT