தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான இடங்களில் ஆட்சியர் ஆய்வு

9th Feb 2021 04:40 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான 800 ஏக்கர் இடங்களை அரசுடமை செய்வதற்கான இடத்தினை ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தனான இடங்களை அரசுடமையாக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கால்வாய், சேரகுளம், மீரான்குளம் மற்றும் வல்லகுளம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட இடத்தில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 800 ஏக்கர் ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ட் பிரைவேட் லிமிடெட் இடத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி அரசுடமை செய்வதற்காக நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT