தமிழ்நாடு

கடலூரில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 55 பேர் கைது

9th Feb 2021 03:08 PM

ADVERTISEMENT

 

கடலூரில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 55 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு ஊதிய விகிதத்தில் பணியாற்றுவோருக்கு நிரந்தர கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.2 ஆம் தேதி முதல் தொடர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி 8ஆவது நாளாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து 55 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் மிகக் குறைந்த அளவே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT