தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

8th Feb 2021 03:24 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சசிகலா சாலை மார்க்கமாக இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கக் கூடி உள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களையும்  கட்டிவைத்திருந்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே சசிகலாவின் ஆதரவாளர்கள் கட்டிவைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.

சசிகலாவை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT