தமிழ்நாடு

நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகையில் பிப்.12-ல் சாலை மறியல்

8th Feb 2021 03:23 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகையில் எதிர் வரும் பிப் 12 ஆம் தேதி தமிழக அரசு ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.தமிழ்செழியன் தலைமை வகித்தார்.

வட்ட பொருளாளர் என்.காமராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பார்களாக மாநில துணைத் தலைவர் எஸ்.பிரசாத் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாநில மையத்தின் அறிவுறுத்தலின்படி வருகின்ற பிப்.12ஆம்‌ தேதி தமிழக அரசு ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி நாகப்பட்டினத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும், மாநில  செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாகை மாவட்டத்தின் பதவி உயர்வு கோரி  இணைப்பதிவாளரிடம் வழங்கிய‌ மனு  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாங்கண்ணி நியாய விலைக் கடையில் பணிபுரிந்த இச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எம்.கஜபதி பணி நீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருக்குவளை வட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய‌ வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக  மாவட்ட நிர்வாகி வீ.பழனிவேலு நன்றியுரை வழங்கினார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT