தமிழ்நாடு

காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் மெடி சிட்டி அமைக்க நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர்

8th Feb 2021 03:13 PM

ADVERTISEMENT

 

காரைக்காலில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் “மெடி சிட்டி” அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் வே.நாராயணசாமி கூறியுள்ளார்.

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு புறவழிச் சாலைக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை  நடைபெற்றது. 

இதில் புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி கலந்துகொண்டு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறியது: 

ADVERTISEMENT

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்த போது, கருணாநிதியின் பெயரில் மேற்படிப்பு மையம், வெண்கல சிலை அமைப்பது,  காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கலைஞர் மு.கருணாநிதி  பெயர் சூட்டுவது என்ற முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டது.  

வெண்கல சிலை அமைக்க இடம் தெரிவு செய்து துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனச் சொன்னதால் தாமதம் ஏற்படுகிறது. காரைக்காலில் ஓரிரு நாள்களுக்கு முன் மேற்கு புறவழிச்சாலை திறக்கப்பட்டது. அப்போது சாலைக்கான பெயர்ப் பலகை தயாராக இல்லை. தற்போது பெயர்ப் பலகை திறக்கப்பட்டுள்ளது.  

காரைக்கால் பிராந்திய வளர்ச்சிக்கு புதுச்சேரி அரசு தனிக் கவனம் செலுத்தி, படிப்படியாகத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ரூ.2 ஆயிரம் கோடி செலவில் "மெடி சிட்டி" என்ற ஒரு திட்டத்தை காரைக்காலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி மருத்துவம், யோகா, இயற்கை வைத்தியம், மூலிகைச் செடிகள் வளர்ப்பு  என்ற மிகப்பெரிய அளவில் இத்திட்டம் அமைய உள்ளது. 

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் காணொலியில் பேசியுள்ளேன். தேர்தல் வரும்போது மாநில அந்தஸ்து குறித்து ரங்கசாமி பேசுகிறார். இதிலிருந்து அவரது உள்நோக்கத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT