தமிழ்நாடு

இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகள்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

8th Feb 2021 02:17 PM

ADVERTISEMENT

இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடு, கோழிகள் துன்புறுத்தப்படாமல் எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்ய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அதிரடிபடையின் மாநில தலைவர் தமிழ்செல்வன் தாக்கல் செய்த மனுவில், இறைச்சிக்காக மாடுகள் மற்றும் எருமைகள்   கொண்டு செல்லப்படும் போது, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதால், வழியிலேயே அவை இறந்து விடுவகின்றன. எனவே அவற்றை எடுத்துச் செல்லும் போது துன்புறுத்தாமல் கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில், மிருகவதை தடைச் சட்ட விதிகளை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிதிகள் மாடுகள் மட்டும் அல்லாமல் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, கோழி உள்ளிட்டவைகளும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதால், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க அரசு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

ADVERTISEMENT

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT