ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மணிக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
விவசாயிகள் விரோத சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகா செயலாளர் கோவிந்தன், சுப்பையா, ராமராஜ், முத்துராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.