தமிழ்நாடு

பல்லடம்: உழவர் உழைப்பாளர் கட்சியினர் சாலை மறியல்

6th Feb 2021 02:51 PM

ADVERTISEMENT

பல்லடம்: மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் அக்கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அக்கட்சி மாநில நிர்வாகிகள் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகிகள் வாவிபாளையம் சோமசுந்தரம், ஈஸ்வரன், பொங்கலூர் நடராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT