தமிழ்நாடு

நீடாமங்கலம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக சாலை மறியல்

6th Feb 2021 01:40 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம்: மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்தும், வேளாண் சட்டத்தை  திரும்பப் பெறக்கோரியும் நீடாமங்கலத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் சாலைமறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியசெயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நீலன்.அசோகன், விவசாயிகள் சங்க நிர்வாகி கே.ராவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றியசெயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியசெயலாளர் சோம.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலைமறியல் போராட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக்  கோரியும் பிரதமர் நரேந்திரமோடியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதனால் நீடாமங்கலத்தில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் வரை செல்லும் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் எதிர் எதிரே நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. 

பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT