ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி மாவட்ட செயலாளர் கருப்பையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
சரண்டர் ஊதியம் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் நீதித்துறை மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், நாம் தமிழர் மேற்கு மாவட்ட செயலாளர் பாலன், விவசாய சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்