தமிழ்நாடு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்: விவசாயிகள் மரியாதை

6th Feb 2021 11:51 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் மாநில தலைவர் கொளத்தூர் வெங்கடேசன் தலைமையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், மாவட்ட துணைத்தலைவர் வானாபாடி பெரியசாமி, முருகேசன் நகர தலைவர் சுந்தரமூர்த்தி, எஸ் எம் சிவக்குமார், புருஷோத்தமன், தனபால், பொன்னுரங்கம், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT