தமிழ்நாடு

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமையில்லை: கே.பி.முனுசாமி

4th Feb 2021 06:19 PM

ADVERTISEMENT

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு தார்மீக உரிமையில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தமது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக டிஜிபியிடம் அதிமுக அமைச்சர்கள் புகாரளித்தனர்.

சட்டப் பேரவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் புகாரளித்தனர். 

படிக்க: சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் புகார்

ADVERTISEMENT

இதன் பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக கொடியை சசிகலா மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே டிஜிபியிடம் புகாரளித்தோம். 

அதிமுக உறுப்பினராக இல்லாத சசிகலா கட்சி கொடியை எப்படி பயன்படுத்தலாம்?. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு தார்மீக உரிமையில்லை என்று கூறினார்.

அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் செல்ல வேண்டும் என்றால் ஐ.நா. அவைக்கு தான் சசிகலா செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவிற்கு தான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடியானதையும் அவர் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT