தமிழ்நாடு

திருநாங்கூரில் ரூ. 60 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி; முதல்வர் திறந்து வைத்தார்

4th Feb 2021 12:20 PM

ADVERTISEMENT

சீர்காழி: சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் நாராயணபெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுலா நிதியின் மூலம் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட இக்கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செல்வராஜ், செயல் அலுவலர் குணசேகரன், ஆய்வாளர் மதியழகன், மேலாளர் அரவிந்தன், நாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுகந்தி நடராஜன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பவானி செந்தமிழன் மற்றும் நாங்கூர் பகுதி கிராம மக்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.

சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 பெருமாள்கள் திவ்யதேசம் அருகருகே ஒரே தொகுப்பாக அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.

ADVERTISEMENT

அவ்வாறு 11 பெருமாள்களும் ஒரு சேர தரிசனம் செய்ய இப்பகுதிக்கு வரும் போது கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரங்களில் தங்கி தரிசனம் செய்ய வசதி இன்றி தவித்து வந்தனர். இதனை அறிந்த தமிழக அரசு நான்கு அறைகள் மற்றும் ஒரு பெரிய ஹாலுடன் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட உத்தரவிட்டது. அதன்படி புதிதாக கட்டப்பட்ட இக்கட்டிடம் சாமி தரிசனம் செய்ய  வருகை புரியும் வெளிமாநில, வெளியூர் பக்தர்களுக்கு பெரும்  பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT